உள்ளூர் செய்திகள்

கைக்குழந்ரை மற்றும் உறவினர்களுடன் சிதம்பரம் பள்ளிவாசல் முன்புதர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்னுடன் 

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை படத்தில் காணலாம்.

சிதம்பரத்தில் பள்ளி வாசல் முன்பு இளம் பெண் குழந்தையுடன் தர்ணா

Published On 2023-04-01 06:10 GMT   |   Update On 2023-04-01 06:22 GMT
  • ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறா
  • மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பல த்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காக சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மகேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார், வீட்டில் சென்று கேட்ட போது பக்கிம் அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணையாக இருந்த போது இஸ்லாமியராக மாற வேண்டும் என தெரிவித்தனர். மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி, அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டு கடந்த 01.01.2023 அன்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது  இதையடுத்து ஜனவரி 16-ந்தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பெற்றெ டுத்தார். இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானார். தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீது மகளிர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News