உள்ளூர் செய்திகள்

நகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

தாரமங்கலம் நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ரூ.500 கட்டணம் மன்ற கூட்டத்தில் முடிவு

Published On 2022-10-20 09:52 GMT   |   Update On 2022-10-20 09:52 GMT
  • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News