உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சமையல் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-03-29 12:58 IST   |   Update On 2023-03-29 12:58:00 IST
  • சின்னத்துரை தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
  • டேனியல்ராஜ்,ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி நடராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது53). தூத்துக்குடியில் சமையல் தொழி லாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது பேத்தியை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு, அருகில் இருந்த ராஜாஜி பூங்காவில் சின்னத்துரையும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். உடனடியாக சின்னத் துரை தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.இதில் திரேஸ்புரத்தை சேர்ந்த டேனியல்ராஜ் (22), டேவிஸ் புரத்தை சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டேனியல் ராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேனியல்ராஜ் மீது தருவைகுளம், தாளமுத்துநகர், வட பாகம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News