உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சொட்டுநீர் குழாய்களை திருடிய 2 பேர் மீது வழக்கு

Published On 2023-08-15 14:50 IST   |   Update On 2023-08-15 14:50:00 IST
  • சொட்டுநீர் குழாய்களை திருடி சென்றது தெரியவந்தது.
  • இரும்பு வியாபாரி கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீதாராமன். இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த வருடம் சாகுபடிக்கு பயன்படுத்திய சொட்டுநீர் குழாய்களை எடுத்து அவரது இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்து உள்ளார் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீதாராமன் மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த சொட்டுநீர் குழாய்களை எடுக்க சென்றுள்ளார் அப்போது அவர் வைத்திருந்த சுமார் ரூ 50, ஆயிரம் மதிப்புள்ள சொட்டுநீர் குழாய்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாராமன் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை வயது (35) மற்றும் அவரது உறவினர் மாதவன் வயது (34)இவர்கள்தான் சொட்டுநீர் குழாய்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் சீதா ராமன் இவர்கள் மீது மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்திய போலீசார் சொட்டுநீர் குழாய்களை திருடிய இவர்கள் நடுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு இரும்பு வியாபாரி கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சின்னதுரை மற்றும் அவரது உறவினர் மாதவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News