உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 14 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-11-24 07:21 GMT   |   Update On 2022-11-24 07:21 GMT
  • பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
  • அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.

அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News