உள்ளூர் செய்திகள்

கோவையில் முதல்முறையாக ஒரேநாள் இரவில் கட்டப்பட்ட பாலம்

Published On 2023-09-19 09:41 GMT   |   Update On 2023-09-19 09:41 GMT
  • ரெடிேமடு பாலங்களை பொருத்தி அதிகாரிகள் சாதனை
  • அடுத்த நாள் காலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது

கோவை,

கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் சாலை கட்டமைப்பு வசதிகள், பாலப்பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றனர்.

கோவை மாநகர பகுதியில் பகல்நேரத்தில் சாலைப்பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயம். இந்தநிலையில் கோவை துடியலூர் பகுதியில் கழிவு நீர் ஓடைப்பாலம் அமைப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி மாநகராட்சி 4-வது வார்டு தொழிற் பூங்காவிற்கு செல்லும் முக்கிய சாலையில், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் காலையில் மேற்கண்ட பாலம்பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.

கோவை மாநகராட்சியில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் கழிவுநீரோடை பாலம் கட்டப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் இது சிறிய பாலம் ஆகும். தற்போது இதற்கு ரெடிேமடு பாலங்கள் வந்து விட்டன. வேறு ஒரு இடத்தில் தயார் செய்து அப்படியே பொருத்தி விடலாம். அதே போலத்தான் நேற்று இரவும் அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர். 

Tags:    

Similar News