உள்ளூர் செய்திகள்

உச்சநீதி மன்ற கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்

Published On 2022-07-03 09:30 GMT   |   Update On 2022-07-03 09:30 GMT
  • இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும்.
  • நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்.

பேராவூரணி:

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா பேராவூரணியில் நடைபெற்றது.

, தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தங்க. குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மருது. குமார் வரவேற்றார். தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத் தமிழர் கொள்கை அறிக்கையை வெளியிட கவிஞர் கான்முகமது பெற்றுக் கொண்டார். இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் கொள்கை விளக்க உரையாற்றினார்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும், அதேபோல் இந்த நகரங்களிலும் துணை தலை நகரம் அமைக்க வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், அக்னிபாத் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், ராஜமாணிக்கம், ஜெயராஜ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், பழனிவேலு, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் ரவீந்திரன், அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News