உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அருகே சோகம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 வயது சிறுவன் சாவு
- வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் அருகே உள்ள வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவனை மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
மேலும் இது குறித்து ரித்தீஷ் தந்தை சரவணன், கருமலைகூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.