உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தேர்வு முடிவை வெளியிட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.18 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2023-05-08 08:17 GMT   |   Update On 2023-05-08 08:17 GMT
  • 27 ஆயிரத்து 37 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
  • அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இதில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 212 மாணவர்கள் , 14 ஆயிரத்து 323 மாணவிகள் என 27037 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

இதில் 25734 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும்.இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற்றதையும் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் வகையில் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கி மாணவ-மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News