உள்ளூர் செய்திகள்

விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதையும், அதில் பங்கேற்றவர்களையும் படத்தில் காணலாம். 

வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 8-ம் ஆண்டு நிறைவு விழா

Published On 2023-02-20 06:48 GMT   |   Update On 2023-02-20 06:49 GMT
  • நிறைவு விழா திருப்பூர் தாராபுரம் ரோடு வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • இயற்கையை நேசிப்பதும், காப்பதுமே இலக்கியத்தின் பெரும் பணி.

திருப்பூர் :

திருப்பூர் வெற்றி அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை 2015-ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆண்டுகளில் இதுவரை திருப்பூர் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் 8-ம் ஆண்டு நிறைவு விழா திருப்பூர் தாராபுரம் ரோடு வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திட்ட இயக்குனர் குமார் வரவேற்றார்.

வெற்றி அமைப்பின் தலைவர் டி.ஆர்.சிவராம் ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் மரக்கன்றுகள் எப்படி சாத்தியமானது என்ற தலைப்பில் பேசினார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், பயிற்சி கலெக்டர் பல்லவி வர்மா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் திருக்குமரன், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய தலை–வர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராயல் கிளாசிக் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மதுரை தொகுதி எம்.பி.சு.வெங்கடேசன் கலந்து கொண்டு இயற்கையும், இலக்கியமும் என்ற தலைப்பில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தின் ஒரு வறண்ட நிலத்தை பசுமையாக்குவோம் என்று கூறி இருந்தால் கூட அது பெரிதாக தெரிகிறது. ஆனால் வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தையே பசுமையாக்கும் திட்டம் தமிழகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. உலகத்தில் மிக பழமையான இலக்கியம் சங்க இலக்கியம் என்று வரலாறு கூறுகிறது. இயற்கையை நேசிப்பதும், காப்பதுமே இலக்கியத்தின் பெரும் பணி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News