உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல்: ஓராண்டில் 85 பேர் ரெயில் விபத்துகளில் சாவு

Published On 2023-04-04 13:45 IST   |   Update On 2023-04-04 13:45:00 IST
  • 2022-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் 52, பழனியில் 25, கொடைரோட்டில் 8 பேர் என மொத்தம் 85 பேர் இறந்துள்ளனர்.
  • பள்ளி விடுமுறை நெருங்கி வருவதால் ரெயில்முன்பு மாணவர்கள் செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் மதுபானம் குடித்துவிட்டு மயங்கி விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரெயில் விபத்துகளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

திண்டுக்கல் மாவட்ட த்திலேயே திண்டுக்கல், பழனி, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் 52, பழனியில் 25, கொடைரோட்டில் 8 பேர் என மொத்தம் 85 பேர் இறந்துள்ளனர்.

பெரும்பாலும் தண்ட வாளத்தை கடக்கும்போதும், இரவு நேரங்களில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளம் அருகே வரு பவர்கள், ரெயில்பெட்டி களில் அஜாக்கிரதையாக அமர்ந்து வருபவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். எனவே அதிகம் விபத்து ஏற்படும் பகுதியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பள்ளி விடு முறை நெருங்கி வருவதால் ரெயில்முன்பு நின்றுகொண்டு மாணவர்கள் செல்பி எடுப்பதையும் வாடிக்கையாக மாற்றி வருகின்றனர். இதனை தடுக்கவேண்டும். தண்டவாளம் அருகே மதுபானம் குடித்துவிட்டு அங்கேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். இதனாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில் விபத்துகளை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News