உள்ளூர் செய்திகள்
மது விற்ற வழக்கில் 84 பேர் கைது
- 14 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யபட்டனர்.
- 504 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம், 14 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் நடத்திய அதிரடிச் சோதனையில் காவல் நிலைய உட்கோட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், அனுமதியின்றி மதுபாட்டில் கள் விற்பனை, அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில். ஒட்டல், பெட்டி கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் அரூர், கோட்டப்பட்டி, கோபி நாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், அ.பள்ளிப் பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்ற மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை யடுத்து 14 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்ட அவர்களிடமிந்து 504 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம், 14 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.