உள்ளூர் செய்திகள்

ஒலிபெருக்கிகளின் செயல்பாட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தொடங்கி வைத்தார்.

குற்றங்களை தடுக்க 8 ஒலிபெருக்கிகள் அமைப்பு

Published On 2023-10-03 10:05 GMT   |   Update On 2023-10-03 10:05 GMT
  • பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் போலீசார் உதவி மையத்தில் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய பஸ் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இந்த உதவி மையத்தில் இருந்து நேரடியாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இருந்தாலும் சிலர் போக்கு வரத்து விதிமுறைகளை மதிக்காமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவது டன் இதை தட்டிக் கேட்கும் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போலீசார் ஒவ்வொரு முறையும் நேரில் சென்று சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அதன்படி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் செயல்பாட்டை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தொடங்கி வைத்தார்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News