உள்ளூர் செய்திகள்
எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
- பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணை பெரும் தலைவர் வக்கீல் கே.சுரேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் கோடுவெளி குழந்தைவேலு, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் (நிர்வாகம்) சுபதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.