உள்ளூர் செய்திகள்

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் துணை கமிஷனர் அனிதா பேசிய காட்சி.

நெல்லை மாவட்டத்தில் நாளை இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு -7321 பேர் எழுதுகின்றனர்

Published On 2022-11-26 15:00 IST   |   Update On 2022-11-26 15:00:00 IST
  • தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா அறிவுரை வழங்கினார்.
  • நாளை நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 -ம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

நெல்லையில் மாநகர பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதனை 7,321 பேர் எழுதுகின்றனர். இதனையொட்டி தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தேர்வு அறையில் பணியாற்ற உள்ள போலீசாருக்கு மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா அறிவுரை வழங்கினார்.

தேர்வையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் இன்று சுத்தப்படுத்தி தயார் படுத்தப்பட்டது. அங்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாளை நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. இதில் தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசு பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட, எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News