அரக்கோணம் அருகே ஓட்டல் மேலாளர் வீட்டில் 70 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
- அரக்கோணம் அருகே உள்ள வாணியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள வாணியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 59).
சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் பிரபாகரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கொள்ளை நடந்திருப்பதை கண்டு அவரது அண்ணன் திடுக்கிட்டார். இதுகுறித்து பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
ஓட்டல் மேலாளர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.