உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்.

வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Published On 2023-04-10 07:35 GMT   |   Update On 2023-04-10 07:35 GMT
  • தங்கும் விடுதியில் தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
  • போலீசார் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேட சந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி தலைமையிலான போலீசார் மோர்பட்டி பிரிவு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது நூதன முறையில் டோக்கன் வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சூதாட்ட த்தில் ஈடுபட்டது திருப்பூர் சுப்பிரமணி, சிவகங்கை கணேசன், கரூர் யுவராஜ், பழனிச்சாமி, கோவை பழனிவேல், சக்திவேல், ஈரோடு ரமேஷ் ஆகியோர் என்பதும் வடமதுரை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு அரவக்குறிச்சியை சேர்ந்த கார்த்தி என்பர் டோக்கன் வழங்கி சென்றுள்ளார்.

எனவே இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் சூதாட்ட கிளப்புகள் சிறிய கட்டிடங்களில் கூட இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே போலீசார் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சூதாட்ட கும்பல் குறித்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News