உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
- போலீசார், அங்கே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை கைது செய்தனர்.
- பிடிபட்ட வர்களிட மிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூபாய் 5000 பறிமுதல் செய்யப்பட்டது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவது அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஏரியூர் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து மூங்கில் முடிவு வனப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஏரியூர் போலீசார், அங்கே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை கைது செய்தனர்.
மேலும் பலர் தப்பி ஓடியதாக தெரிகிறது. பிடிபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் மூங்கில் மடுவு கிராமத்தை சேர்ந்த வர்கள் என தெரியவந்தது.
பிடிபட்ட வர்களிட மிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூபாய் 5000 பறிமுதல் செய்யப்பட்டது. 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.