உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

Published On 2022-12-03 07:00 GMT   |   Update On 2022-12-03 07:00 GMT
  • ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையின்கீழ் போலீசார் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஒரு கிலோ கஞ்சா காரில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதனைபறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த சத்திரப்பட்டியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன்(47), மூலச்சத்திரத்தை சேர்ந்த ஆர்யராஜ்(27) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ரோட்டில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்திவந்த பொன்மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(30), சாணார்பட்டியை சேர்ந்த காதர்மைதீன்(42), மூலச்சத்திரத்தை சேர்ந்த அஜித்குமார்(47), பேகம்பூரை சேர்ந்த ஹக்கீம்(27) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News