உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் தவளம் கிராமத்தில் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூடுதல் ஆட்சியர் வந்தனாகார்க் உள்ளார்.

7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளில் 6 பணிகள் முடிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம்

Published On 2023-02-12 15:42 IST   |   Update On 2023-02-12 15:42:00 IST
  • பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, கங்கலேரி ஊராட்சி மற்றும் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

2022-23ம் நிதியாண்டில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் 50 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ஓசூர் ஒன்றியம் தேவேரிப்பள்ளி மற்றும் 23 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நாகொண்டப்பள்ளி மற்றும் 27 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,

கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்ைட மற்றும் 28 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி மற்றும் 143 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி மற்றும் 39 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் என மொத்தம் 2022-23ம் நிதியாண்டில் ரூ.122 கோடி மதிப்பில் 7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அலுவலர்களுடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க் உதவி பொறியாளர்கள் சாந்தி, கலைபிரியா, ரகோத்சிங், துணை நிலநீர் வல்லுநர்கள் கல்யாணராமன், ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News