உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5,474 பேர் பங்கேற்பு

Published On 2022-06-26 04:19 GMT   |   Update On 2022-06-26 04:19 GMT
  • திண்டுக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக 8 மையங்களில் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
  • அதில் 4,411 ஆண்கள், 1,063 பெண்கள் என மொத்தம் 5,474 பேர் பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர்.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 5,215 ஆண்கள், 1,278 பெண்கள் என 6,493 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 4,411 ஆண்கள், 1,063 பெண்கள் என மொத்தம் 5,474 பேர் பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் தமிழ் தகுதித்தேர்வு நடைபெற்றது. முதல் முறையாக நடைபெறும் இத்தேர்வில் நேரடி விண்ணப்பத்தாரர்கள் மட்டுமின்றி காவல் துறையினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களும் பங்கேற்றனர்.

அதன்படி தமிழ்தகுதித்தேர்வில் 4,942 ஆண்கள் மற்றும் 1,393 பெண்கள் என மொத்தம் 6,102 பேர் பங்கேற்றனர். மொத்தம் 1,144 பேர் தமிழ் தகுதித்தேர்வில் பங்கேற்கவில்லை.

தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 5 தேர்வு மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதுவதற்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்த 4,522 பேரில் மொத்தம் 3,787 பேர் தேர்வு எழுதினர். 735 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் போலீஸ் துறை செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் தேர்வு நடைமுறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News