உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இந்தி தேர்வை 505 மாணவர்கள் எழுதினர்கள்

கிருஷ்ணகிரியில் இந்தி தேர்வை 505 மாணவர்கள் எழுதினர்கள்

Published On 2023-02-21 08:28 GMT   |   Update On 2023-02-21 08:28 GMT
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.
  • இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.

கிருஷ்ணகிரி,

திருச்சி இந்தி பிரச்சார சபா சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.

இதில், காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்த பிராத்தமிக் தேர்வை, 286 மாணவ, மாணவியர் எழுதினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் தாள், இரண்டாம் தாள் என நடந்த மத்தியமா தேர்வை, 109 மாணவ, மாணவியர் எழுதினர்.

இத்தேர்வுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன் மேற்பார்வையில் நடந்தன. இதே போல், குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த பிராத்மிக் தேர்வை, 100 மாணவ, மாணவியரும், மத்தியமா தேர்வை 20 மாணவ, மாணவியரும் எழுதினர். இத்தேர்வுகள் பள்ளியின் முதல்வர் சர்மிளா மேற்பார்வையில் நடந்தன. தேர்வுகளை பள்ளியின் நிறுவனர் அன்பரசன் பார்வையிட்டார். கி

ருஷ்ணகிரியில் இரண்டு இடங்களில் நடந்த இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.

Tags:    

Similar News