உள்ளூர் செய்திகள்

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி.


வாசுதேவநல்லூரில் பொது இடங்களில் புகை பிடித்த 5 பேருக்கு அபராதம்

Published On 2022-10-08 09:09 GMT   |   Update On 2022-10-08 09:16 GMT
  • பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது

சிவகிரி:

பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பீடி, சிகரெட் புகைப்பதாகவும், ஆங்காங்கே புகையிலை எச்சில் துப்பி பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒருசிலர் நடந்து கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம், மெயின் பஜார், காய்கறி மார்க்கெட் பஜார், பள்ளிகள் அருகே மற்றும் பொதுஇடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதமும், பள்ளிகளின் அருகே கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்ததாக 2 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News