உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்திய 5 பேர் கைது

Published On 2023-01-25 06:54 GMT   |   Update On 2023-01-25 06:54 GMT
  • ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
  • கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வருசநாடு:

ஆந்திரமாநிலத்தில் இருந்து தேனி மாவட்ட த்திற்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ராகார்க்-க்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி ஐ.ஜி தனிப்படை போலீசார் திண்டுக்கல் ஐ.ஜி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் நேற்று 60 கிலோ கஞ்சாவை மீன்பெட்டிக்குள் வைத்து கடத்திய ராஜா(37) என்பவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கடமலைக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருண், ஈஸ்வரன், சத்தியராஜ் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

தேவாரம் போலீசார் அவினாசி ஈஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை க்காக வைத்திருந்த செல்வ பிரசாத்(30), புஷ்பராஜ்(24), தங்கபாண்டி(23) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்க ளிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிடிபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரி த்துள்ளனர்.

Tags:    

Similar News