உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட பாம்புடன் தீயணைப்பு வீரர்கள்.

ஒட்டன்சத்திரம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு உயிருடன் மீட்பு

Published On 2023-03-29 12:59 IST   |   Update On 2023-03-29 12:59:00 IST
  • 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் மீட்டு ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படை க்கப்பட்டது.
  • குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் உள்ள சொசைட்டி காலனியில் வசித்து வரும் உம்மன் மகன் தாமஸ் என்பவருடைய வீட்டில் இன்று காலை பாம்பு புகுந்து விட்டதாக வீட்டின் உரிமையாளர் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடு த்துசம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவருடைய வீட்டில் பதுங்கி இருந்த சுமார் ஐந்து அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்க ப்பட்ட பாம்பு ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படை க்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பாம்பை பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News