உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

குருப் 4 தேர்வு தேனி மாவட்டத்தில் நாளை 44,195 பேர் எழுதுகின்றனர்

Published On 2022-07-23 10:32 IST   |   Update On 2022-07-23 10:32:00 IST
  • தேனி மாவட்டத்தில் குருப் 4 போட்டித் தேர்வை மொத்தம் 44,195 பேர் எழுதுகின்றனர்.
  • தேர்வுமைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலர்கள் ஈடுபடுகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் நாளை நடைபெறும் குருப் 4 போட்டித் தேர்வை மொத்தம் 44,195 பேர் எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் குருப் 4 தேர்வு 26 கல்லூரிகள், 96 பள்ளிகளில் அமைக்க ப்பட்டுள்ள 166 தேர்வு மையங்களில் நாளை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. போட்டித்தேர்வு எழுதுவ தற்கு மொத்தம் 44,195 பேர் விண்ணப்பித்து ள்ளனர்.

தேர்வு கண்காணிப்பு பணியில் 166 கண்காணி ப்பாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள், 2,206 தேர்வரை கண்காணி ப்பாளர்கள் ஈடுபடுகின்ற னர். தேர்வு நடை முறைகள் வீடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.தேர்வுமைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலர்கள் ஈடுபடுகின்ற னர்.

Tags:    

Similar News