உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு 440 கான்கிரீட் வீடுகள்: கலெக்டர் தகவல்

Published On 2022-11-13 09:10 GMT   |   Update On 2022-11-13 09:10 GMT
  • கான்கிரிட் வீடுகளை கட்டித்தருவதற்கான நடவடிக்கைகளை மே ற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
  • அரசின் அனைத்து சுற்றுசூழல் விதிகளும் பின்பற்றி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டிட கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வசிக்கும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலில் வாழ்ந்திடும் பொருட்டு கான்கிரிட் வீடுகளை கட்டித்தருவதற்கான நடவடி க்கைகளை மே ற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடிபுதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. கீழ்ப்புத்துப்பட்டு கடலோர பகுதி என்பதால் மண்ணின் தன்மை அறிந்து கட்டிடங்கள் தரமா னதாகவும், பலமானதாகவும் இருக்கும் பொருட்டு, அறிவியல் பூர்வமாக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், கடலோர ஒழு ங்குமுறை ஆணையத்திற்கு கட்டிடத்தின் தன்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு, வரைபடம், பணிகள் மேற்கொள்ளப்படும் காலம், அளவு போன்ற விவர ங்களுடன் விண்ணப்பி த்து அனுமதி பெறப்படவுள்ளன. அரசின் அனைத்து சுற்றுசூழல் விதிகளும் பின்பற்றி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, மண்டல பொறியாளர் (சுற்றுசூழல்) செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News