உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் 44 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Published On 2023-09-26 14:07 IST   |   Update On 2023-09-26 14:07:00 IST
  • கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் அதிரடி சோதனை
  • 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அரவேணு,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தது. எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து, கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் கோத்தகிரி உணவுபாதுகாப்பு அதிகாரி சிவராஜ், மீன்வள சார்ஆய்வாளர் ஆனந்த், மீன்வள மேற்பார்வையாளர் ஜீவானந்தம், உதவியாளர் பரமன் அடங்கிய குழுவினர், அங்கு உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் சுமார் 44 கிலோ கெட்டுப் போன அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், மீன் வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது தரமா னவையா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். மீன்களை பலநாட்களாக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்திவைத்து விற் பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

கோத்தகிரி பகுதியில் சுற்றுலாபயணிகள் அதிக மாக குவிந்து வருகின்றனர். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில உணவு விடுதிகளிலும் பழைய பொருட்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News