உள்ளூர் செய்திகள்

400மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தி பேரணி சென்றவர்கள்.


சாத்தான்குளத்தில் 400 மீட்டர் நீளத்தில் தேசியக்கொடியை ஏந்தி பிரம்மாண்டமான பேரணி

Published On 2022-08-13 09:36 GMT   |   Update On 2022-08-13 09:36 GMT
  • பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.
  • தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

இன்று காலை சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை தாசில்தார் தங்கையா கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய், சுகாதாரத்துறை ஆய்வாளர் கிரிஸ்டோபர் செல்வதாஸ், சாத்தை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 400 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான தேசிய கொடியை பேரணியாக கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

இப்பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.





Tags:    

Similar News