உள்ளூர் செய்திகள்

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் மைதிலியை படத்தில் காணலாம்.

ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் நகை திருட்டு: சேலம் பிரபல கொள்ளைக்காரி ஈடுபட்டது அம்பலம்

Published On 2023-09-29 14:59 IST   |   Update On 2023-09-29 14:59:00 IST
  • மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  • மூதாட்டி ஆப்பிளை சாப்பிடவே சுயநினைவை இழந்து மயங்கி விழுந்திருக்கிறார்.

 தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவசேகர். அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26 - ம் தேதி கணவன், மனைவி இருவரும் பணிக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா, மற்றும் இவருடைய வயதான உறவினர் ஆகிய இருவர் இருந்துள்ளனர்.

அப்போது கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டினில் நுழைந்து தான் உங்கள் மருமகள் ஜெயந்தியுடைய தோழி என தெரிவித்து, அவர்களிடம் நலம் விசாரித்து பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த முதியவர் தனக்கு தருமபுரியில் வேலை இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளார். இவரை கண்காணிக்க அந்த பெண்னும் பின்தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து மற்றொரு பெண் வாங்கி வந்த ஆப்பிள் ஒன்றை மூதாட்டிக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்துள்ளார். அந்த மூதாட்டி அதை சாப்பிடவே சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடித்து சென்றது, சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான மைதிலியாகத்தான் இருக்கும் என வலுவான சந்நேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து, மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24 -ம் தேதி தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாபட்டி கிராமத்தில் பெருமாள் கோவில், பச்சையம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் 9 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அன்று இரவே பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்து வைத்துள்ள டேட்டாவுடன் கம்ப்யூட்டர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த 26 -ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆசிரியரின் வீட்டில் மூதாட்டிக்கு ஆப்பிள் பழத்தை கொடுத்து மயக்கம் அடைந்த பின் 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15,000 பணத்தை சத்தம் இல்லாமல் கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து நேற்று இரவு 5 கிலோ தங்கம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News