உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது
- சூர்யா என்ற சூரியகாந்த்(32) மற்றும் அவரது நண்பர்கள் முகமது கலிமை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
- நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த முகமது கலிம் (வயது24). இவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திம்மச்சந்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு சரக்கு வாங்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூரியகாந்த்(32) மற்றும் அவரது நண்பர்கள் முகமது கலிமை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த கலிம் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா, முரளி (வயது 33 ,)ஸ்டாலின் (32), காணிக்கைசாமி (38 )ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.