உள்ளூர் செய்திகள்

சினிமா துணை நடிகரை வெட்டி கடத்த முயற்சி- 4 பேர் கும்பல் கைது

Published On 2023-04-18 15:35 IST   |   Update On 2023-04-18 15:35:00 IST
  • மது குடிக்க வற்புறுத்திய கும்பல் கத்திமுனையில் அஜித்தை அங்கிருந்து கடத்தி செல்ல முயன்றனர்.
  • ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

போரூர்:

சென்னை ராமாபுரம், திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (23) சினிமா துணை நடிகர். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென 4 பேர் வந்தனர். அவர்கள் அஜித்தை சரமாரியாக தாக்கினர். மேலும் மது குடிக்க வற்புறுத்திய கும்பல் கத்திமுனையில் அஜித்தை அங்கிருந்து கடத்தி செல்ல முயன்றனர்.

அதிர்ச்சி அடைந்த அஜித் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் அஜித்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் லேசான காயத்துடன் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அவர் ராமாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அஜித்தை தாக்கி கடத்த முயன்றது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, கார்த்திக், தினேஷ் மற்றும் வேலூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமான மகேசிடம் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். அஜித் பின்னர் அதை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News