உள்ளூர் செய்திகள்

சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-09-04 13:27 IST   |   Update On 2023-09-04 13:27:00 IST
  • மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது.
  • காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்லாம்பட்டி கிராமத்தில் உள்ள புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் அதேபகுதியை சேர்ந்த சண்முகம் (வயது59), செல்வம் (58), துரையரசன் (60), மனோகரன் (68) என்பது தெரியவந்தது, அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.450 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News