சீர்காட்சியில் சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.
உடன்குடி ஒன்றியத்தில் ரூ.3.87 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி - அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- தண்டுபத்து-சீர்காட்சி சாலையை ரூ 1.67 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல் பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உடன்குடி:
தூத்க்குடிமாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் திருச்செந்தூர் உட்கோட்டம் சார்பில் வேப்பங்காடு- வாகைவிளை சாலையை ரூ 2.20 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல், தண்டுபத்து-சீர்காட்சி சாலையை ரூ 1.67 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம்,
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார், உதவிக் கோட்டப் பொறியாளர் விஜயசுரேஷ்குமார், உதவி பொறியாளர் சிபின், முக்காணி கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரிசங்கர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதிலிங்கம், கருணாகரன், ஓன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கலட்சுமி, செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, ஓன்றிய அவைத்தலைவர் ஷேக் முகம்மது, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, ரஞ்சன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பாய்ஸ், அஜய், ஓன்றிய பொருளாளர் தண்டு பத்து பாலகணேசன் மற்றும் மகாலிங்கம், சுடலைக்கண், மோகன், சாத்தான்குளம் ஓன்றியக்குழு உறுப்பினர் சுதாகர், ரஜினிகாந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பங்காடு
வேப்பங்காட்டில் நடை பெற்ற நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் பாலசிங், வேப்பங்காடு பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம், யூனியன் கவுன்சிலர் தங்கலட்சுமி, கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.