உள்ளூர் செய்திகள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைய வழியாக விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள்

Update: 2023-03-27 09:43 GMT
  • எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு நடைபெறும்.
  • இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதார ர்களிடமிருந்து வருகிற 31ம் தேதி வரை இணைய வழியாக (லீttஜீs://ணீரீஸீவீஜீணீtலீஸ்ணீஹ்u.நீபீணீநீ.வீஸீ) விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கான இணைவழித் தோவு வருகிற மே மாதம் 20ம் தேதியன்று நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் 2002ம் ஆண்டு டிசம்பர் 26 அல்லது அதற்கு பிறகு பிற்நதவர்களாகவும், 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 26 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு நடைபெறும். இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 04343-291983 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்வதோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவல் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News