உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தியதாக கைதான 3 பேரை படத்தில் காணலாம். 

விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2022-08-24 12:29 IST   |   Update On 2022-08-24 12:29:00 IST
  • விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

விழுப்புரம்:

புதுவை மாநிலத்தி லிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வழியாகபல்வேறு பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மது பாட்டில்கள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இதனைதடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குதனிப்படை அமை த்து தீவிர வாகன சோதனை செய்து வருகிறார். இந்நிலையில் புதுவை யில் இருந்து காரில் மது பாட்டில் கடத்துவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வந்த தகவலின் பெயரில் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.

அதனபடி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணி மற்றும் தலைமை காவலர் பிரபுதாஸ் சுதாகர் மற்றும் போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 700 சாராய பாக்கெட்டுகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22) சூர்யா (23) ரங்கநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (23) இந்த மூவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News