உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், போலீசாரையும் படத்தில் காணலாம்.

ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

Published On 2023-08-20 15:03 IST   |   Update On 2023-08-20 15:03:00 IST
  • அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • ஒரே நாளில் கிருஷ்ணகிரி பகுதியில் 3 பிக்கப் வேன்களில் 6.55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி, 

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், கோவை மண்டல எஸ்.பி.பாலாஜி மேற்பார்வையில் பொது விநியோகத்திட்ட அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் சரக டி.எஸ்.பி விஜயகுமார் மேற்பார்வையில், நேற்று கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்ஐ.க்கள் கிருஷ்ணவேணி, மணிகண்டன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இரண்டு பிக்கப் அப் வேன்களை சோதனை செய்தனர். அதில் பெரிய மற்றும் சிறிய அளவில் 90 மூட்டைகளில் 4500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வேன்களை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி கட்டிகா னப்பள்ளி சிவக்குமார் மகன் மணிகண்டன், கட்டி கானப்பள்ளி பொன்மலை க்கோயில் முருகன் மகன் லோகேஷ் ஆகிய இருவரை கைது செய்து, அரிசியுடன் பிக்அப் வேன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் வாகனம் மற்றும் அரிசி உரிமையாளர்களான முனியப்பன், அமரேஷ், வசந்த், பரத் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

இதே போல், சப்இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாரியம் புதூர் கிராமம் அருகில் வாகன தணி க்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 41 மூட்டைகளில் 2050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டு, வேனை ஓட்டி வந்த டிரைவரான கிருஷ்ணகிரி மூங்கில்புதூர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

மேலும் வேன் மற்றும் அரிசி உரிமையாளரான கோவிந்தராஜ்(எ)மெர்சல் மற்றும் காளியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் இந்த அரிசியை கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமங்களில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய கர்நாடகாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி பகுதியில் 3 பிக்கப் வேன்களில் 6.55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News