கோப்பு படம்.
தேனி அருகே பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
தேனி:
தேனி அருகே உள்ள போடேந்திரபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த செல்லையா மனைவி காமாட்சி (வயது 77). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் அங்கு உயிரிாந்தார். வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாராயண தேவன்பட்டி கள்ளர் பள்ளித்தெருவைச் சேர்ந்த ராஜாமணி மனைவி முத்துலெட்சுமி (வயது 63). கணவர் இறந்து விட்ட நிலையில் முத்துலெட்சுமி தனியாக வசித்து வந்தார். கடந்த 5 வருடங்களாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு 2 கால்களிலும் புண் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராஜா (34). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.