முத்தையாபுரத்தில் தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது
- தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த கூலி தொழிலாளிகள் வேலைக்கு சென்று விட்டு ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்
- அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த மனோஜ் (வயது 25), சரவணக்குமார் (25) ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி இரவு முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் அவர்கள் இருவரையும் திடீரென சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட நேருஜிநகர் அருண்ராஜ் (33), நேசமணி நகர் பிச்சையா (20), சாமி நகர் முனியசாமி (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.