உள்ளூர் செய்திகள்

2வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி.. சாம்பியன் பட்டம் வென்றார் மஹிபால் சிங்

Published On 2025-06-22 19:28 IST   |   Update On 2025-06-22 19:28:00 IST
  • இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது.
  • மஹிபால் சிங் நேரடி போட்டிகளில் விஷ்ணுவை என்ற பின்பால்கள் அடிப்படையில் வீழ்த்தினார்.

2வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் மையத்தில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மஹிபால் சிங் - விஷ்ணு.எம் மோதினார்கள்.

பரபரப்பான இப்போட்டியில் மஹிபால் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை (2-0) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

மூன்று போட்டிகளில் சிறந்த பின்பால்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில் மஹிபால் சிங் நேரடி போட்டிகளில் விஷ்ணுவை (225-217 & 202-180) என்ற பின்பால்கள் அடிப்படையில் வீழ்த்தினார்.

சிறப்பு பரிசுகள்:

6 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி : விஷ்ணு.எம் (201.83)

ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் : விஷ்ணு.எம்(268)

Tags:    

Similar News