உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி

Published On 2023-08-06 14:50 IST   |   Update On 2023-08-06 14:50:00 IST
  • சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் ஜூன் வரை நடந்தது.

சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், முதற்கட்ட நகர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி பல்கலை.யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றம் பாஸ்வேர்ட் பயன்படுத்தி தங்களின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 1,732 விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (7ம் தேதி) பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி மற்றும் அலைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

இந்த கல்வியாண்டில் கல்லூரி திறக்கப்படும் தேதி, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611346, 94864-25076, 94886-35077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News