சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு 27-ந்தேதி தேர்வு
- ஆவின் நிறுவனத்தில் தற்போது 812 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 4,85,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்து வருகிறது.
- 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் தற்போது 812 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 4,85,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆவின் நிறுவனம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2023-2024) புதிய கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை தோற்றுவித்து, அந்த இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. அதன்படி 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமை யான விபரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வருகிற 27-ந்தேதி நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் காலை 10 மணிக்கு சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொது மேலாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.