உள்ளூர் செய்திகள்

விழாவில் மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

250 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியமிக்க மாலை தாண்டும் விழா கோலாகலம்

Published On 2023-04-11 12:08 IST   |   Update On 2023-04-11 12:08:00 IST
  • தேவ துந்துமி முழங்க பெண்கள் மங்கள இசையுடன் தேவராட்டம், கும்மியாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஜே.புதுக்கோட்டையில் பூர்வீக மாக கொண்ட பொம்மி நாயக்கர், காளநாயக்கர், அம்பையநாயக்கர்களுக்கு பாத்தியப்பட்ட மாலை தாண்டும் பெருவிழா நடைபெற்றது. கடந்த 250 ஆண்டுகளாக 5 ஆண்டு களுக்கு ஒரு முறை இவ்விழா நடைபெறும். பொம்மைய சாமி மாலை தாத்தையா மலைக்கோவிலில் கடந்த 9-ந்தேதி மாலை பொங்கல் அழைப்பு,பிறந்தவீட்டு பிள்ளைகள் கொழுக்கட்டை, பழம் சிறப்பு அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இரவு ராஜகம்பளத்தார் குல வழக்கப்படி தேவ துந்துமி முழங்க ெபண்கள் மங்கள இசையுடன் தேவராட்டம், கும்மியாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாடுகளுக்கு பால்பூஜை செய்து மலைக்கோவில் வந்தடைந்தவுடன் மந்தையார்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வில்வக்கூடை அழைத்தல், பொதிகல் எடுத்தல், சலகைஎருதுமாடுகள் மாலை தாண்டுதல் விழா போன்றவை சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டி மாடுகளை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மாடுகளுக்கு பரிகாரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க மாடுகளை ஊர்வலமாக சாமியாடியபடி அழைத்துச்சென்றனர். கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News