உள்ளூர் செய்திகள்

சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published On 2024-01-06 10:15 GMT   |   Update On 2024-01-06 10:15 GMT
  • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
  • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

சென்னை:

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News