உள்ளூர் செய்திகள்
தீ

திருவெண்ணைநல்லூர் அருகே பூக்கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்

Published On 2022-06-04 16:40 IST   |   Update On 2022-06-04 16:40:00 IST
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பூக்கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர்  ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆறு இறக்கத்தில் திருவெண்ணைநல்லூர்- விழுப்புரம் சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்றார். இரவு நேரத்தில் பூக்கடை திடீர் என எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்தார். அப்போது பூக்கடை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்று உள்ளதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குபதிந்து பூக்கடைக்கு தீ வைத்த கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News