உள்ளூர் செய்திகள்
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு

Published On 2022-06-04 16:00 IST   |   Update On 2022-06-04 16:00:00 IST
தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
Tags:    

Similar News