உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் 8, 22-ந் தேதிகளில்பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

Published On 2022-06-04 15:27 IST   |   Update On 2022-06-04 15:27:00 IST
நெல்லையில் 8, 22-ந் தேதிகளில் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.
நெல்லை:

தமிழக அரசு அனைத்து மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு  மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 2 வாரங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

இது‌குறித்து  நெல்லை  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறியதாவது:-

பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்நிலையில் வருகிற 8-ந்தேதி மற்றும்  22-ந்தேதியில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை  மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதன் கிழமைகளில்  குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்பதுடன் அவர்களின் மனுக்களை  பெற்றுக் கொண்டும் மேலும் முந்தைய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News