உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50-ஐ நெருங்கியது

Published On 2022-06-04 09:46 GMT   |   Update On 2022-06-04 09:46 GMT
நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50-ஐ நெருங்கி உள்ளது. ஒரு வாரத்தில் ரூ.20 அதிகரித்துள்ளது.
நெல்லை:

நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் வரும்.
 
இந்த 2 மாவட்டங்களை தவிர ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் வரும்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரங்களில் ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் விலை உயர தொடங்கியது. இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காயின் விலை ரூ.48-க்கு விற்பனையாகிறது.

மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்யும் போது ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் கத்தரிக்காய் விலை ரூ.20-ஐ தாண்டி உயர்ந்துள்ளது.

இதனால் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வெள்ளை கத்தரிக்காய் விலை அதிகரித்து வருவதால் பச்சை, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு மவுசு அதிரித்துள்ளது.

இன்று உழவர் சந்தைகளில் பச்சை நிறத்திலான கீரி கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30-க்கும், ஊதா நிறத்திலான கீரி கத்தரிக்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்டை-36, புடலை-22, அவரைக்காய்-80, பச்சை மிளகாய்-36, முருங்கைக்காய்-60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
Tags:    

Similar News