உள்ளூர் செய்திகள்
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி வழங்கினார்.

கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்

Published On 2022-06-04 09:43 GMT   |   Update On 2022-06-04 09:43 GMT
ஆலங்குடியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கபிஸ்தலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி ஊராட்சியில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் ஏற்பாட்டில் மறைந்த தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வலங்கைமான் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விதவை பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளையும் 8 பேர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும் 30 பேருக்கு இலவச தையல் எந்திரங்களையும் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சொந்த செலவில் செய்யப்பட்டிருந்தது

நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், விஜயபாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் கோபால், ஞானசேகரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, கிளை செயலாளர்கள் அன்பு, சுரேஷ், கருணாநிதி, நேரு, சண்முகம், பஞ்சு. இரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, ராணி பெருமாள், மஞ்சுளா கோபால், ரவி, பன்னீர்செல்வம், அன்பரசன், இளைஞரணி நிர்வாகிகள் ரஞ்சித்குமார், ராஜ்குமார், முத்துராமன், ஏவிஎம் ராஜ், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News