உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மெய்யநாதன்

பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 172 நிறுவனங்களுக்கு சீல்- அமைச்சர் தகவல்

Published On 2022-06-04 14:48 IST   |   Update On 2022-06-04 14:48:00 IST
பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 172 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது :

நகரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் கனவுத் திட்டமாக உள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞசப்பை இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் தூய்மையான பசுமையான, விலங்கினங்கள் வாழத் தகுதியான மாநிலமாக மாற்றப்படும்.

தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் துறை சர்பில் ஆயிரத்து 180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 172 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தீன் பைகள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் தேங்கும் 143 கிடங்குகள் கண்டறியப்பட்டு ஓராண்டில் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும். வரும் காலங்களில் குப்பைகள் எங்கு சேகரிக்கப்படுகிறதோ அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்ககூடிய திட்டம் தொடங்கப்படும்.

ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள்ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் நிறைவுபெறும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
Tags:    

Similar News